திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
பொன்னியின் செல்வன் திரைப்படம் ரசிகர்களை ஏமாற்றியது போல் மகாபாரதம் திரைக்கதை இருக்காது என ராஜமௌலி பேட்டி.?
உலக சினிமா ரசிகர்கள் பெரிதளவில் பேசும் அளவிற்கு பிரமாண்டமாக வெளியான திரைப்படம் 'பாகுபலி'. இந்த திரைப்படத்தின் இரண்டு பாகங்கள் வெளியாகி இயக்குனர் ராஜமௌலியின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
'பாகுபலி' திரைப்படத்தின் பிரம்மாண்டத்தையும், கிராபிக்ஸ் காட்சிகளையும், ரசிகர்கள் பெரிதளவில் இன்று வரை பாராட்டி வருகின்றனர். இப்படம் தமிழ், தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் ஹிட்டாகியதைப் போலவே மணிரத்னம் கல்கி எழுதிய 'பொன்னியின் செல்வன்' நாவலை திரைப்படமாக்கினார்.
இப்படத்தின் முதலாம் பாகம் கடந்த ஆண்டு வெளியான நிலையில் மிகப்பெரிய ஹிட்டாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இரண்டாம் பாகம் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி மணிரத்தினம் கதையை மாற்றி விட்டார் என்று ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
இதனைக் குறிப்பிட்ட ராஜமவுலி 'பொன்னியின் செல்வன்' கதை போல 'மகாபாரதம்' திரைக்கதை உண்மை கதையை மாற்றி அமைக்காமல் ரசிகர்களை ஏமாற்றும் விதத்தில் இருக்காது என்று மகாபாரத ரசிகர்களுக்கு ராஜமவுலி உறுதியளித்திருக்கிறார். இந்தப் பேட்டியின் வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.