பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
அட.. இவரு அந்த ஹிட் பட இயக்குனராச்சே.! ரஜினியின் 170வது படத்தை இயக்கப்போவது யார்னு தெரியுமா?? பரவும் சூப்பர் தகவல்!!
தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகர் ரஜினிகாந்த் அடுத்ததாக நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த நிலையில் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன்பு சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக சென்னையில் மிகப்பெரிய ஜெயில் செட் போடப்பட்டு சூட்டிங் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் தற்போது ரஜினியின் அடுத்த படம் அதாவது அவரது 170 வது படம் குறித்த தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது. அதாவது தலைவரின் 170 வது படத்தை இளம் இயக்குனரான சிபி சக்கரவர்த்தி இயக்கவுள்ளதாக தகவல் பரவி வருகிறது. இவர் இதற்கு முன்பு
சிவகார்த்திகேயனின் டான் படத்தை இயக்கி வெற்றி கண்டவர். இருப்பினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளிவரவில்லை.