சிறகடிக்க ஆசை.. சர்ச்சை நாயகிக்கு, ஹீரோயின் வாய்ப்பு.. ட்ரைலர் வெளியீட்டு விழாவில் சுருதி நாராயணன்.!
"விஜயை பரிசோதனை எலியாகிட்டாங்க!" விஜயை ட்ரோல் செய்யும் ரஜினி, அஜித் ரசிகர்கள்!

தளபதி விஜய் நடித்து லோகேஷ் இயக்கத்தில் வெளியான "லியோ" திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் பாக்ஸ் ஆஃபீஸிலும் சாதனை படைத்துள்ளது. இந்நிலையில் விஜயின் 68வது படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார்.
இப்படத்திற்கு "தளபதி 68" என்று தற்காலிக தலைப்பு வைக்கப்பட்ட நிலையில், விஜய் இப்படத்தின் படப்பிடிப்பிற்காக வெளிநாட்டிற்கும் சென்று வந்துள்ளார். இந்நிலையில் இப்படத்திற்கு BOSS அல்லது PUZZLE என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
ஆனால் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தனது ட்விட்டரில் "ரசிகர்கள் கூறிய இரண்டு தலைப்பும் படத்திற்கு வைக்கப்படவில்லை. வெங்கட் பிரபு வேறு ஒரு பெரிய திட்டத்துடன் இருக்கிறார்" என்று கூறியிருந்தார். இந்நிலையில், படத்திற்கு GOAT என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தகவல் பரவி வருகிறது.
ஆனால் இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகாத நிலையில், அஜித் மற்றும் ரஜினி ரசிகர்கள் "விஜயை பரிசோதனை எலியாகவே இயக்குனர்கள் பார்க்கின்றனர். GOAT னா ஆடு தானே? ஆடு சிக்கிருச்சு டோய்!" என்று ட்ரோல் செய்து வருகின்றனர்