ரஜினி முருகன் என்னுடைய கதை! அதை திருடிவிட்டனர். பிரபல இயக்குனர் பேட்டி!



Rajini murugan is my story director samuthrakani

கதை திருட்டு என்ற வார்த்தை தற்போது தமிழ் சினினிமாவில் அதிகரித்துவரும் நிலையில் சர்க்கார் படத்தின் கதை என்னுடையது என்று உதவி இயக்குனர் ஒருவர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். செங்கோல் என்ற பெயரில் நான் அந்த கதையை எழுதியதாகவும், இயக்குனர் முருகதாஸ் அதை சர்க்கார் என்ற பெயரில் படமாக்கி வருவதாகவும் புகார் தெரிவித்தார்.

பின்னர் ஒருவழியாக சர்க்கார் படக்குழுவும், உதவி இயக்குனார் வருணும் சமரசமாக பேசி முடித்துக்கொண்டனர். இந்நிலையில் கத்தி படத்தின் கதை என்னுடைது என்று குறும்பட இயக்குனர் அன்பு ராஜசேகர் என்பவர் நேற்று(அக்டோபர் 31) குடும்பத்துடன் உண்ணா விரதம் நடத்தினர்.

Sarkar

தொடர்ந்து திருட்டுக்கதையில் சிக்கிவரும் முருகதாஸ் பற்றியும், திருட்டு கதை பற்றியும் நடிகருக்கும், இயக்குனருமான சமுத்ரகனியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர் ரஜினி முருகன் கதை என்னுடையதுதான்.

நான் ஒரு நான்கு வருடங்களுக்கு முன்னர் சிவகார்திகேயனிடம் ஒரு கதை ஒன்றை கூறி இருந்தேன். கதையை கேட்டு முடித்ததும் நடிகர் சிவகார்த்திகேயன்’அண்ணே நீங்க சொன்ன பாதி கதை ரஜினி முருகன் கதை போலவே உள்ளது. உங்க படத்தில் பாட்டி முக்கிய கதாபாத்திரம் என்றால் ரஜினி முருகானில் தாத்தா முக்கிய கதாபாத்திரம் என்றார்.

Sarkar

அந்த இயக்குனரும் மதுரகாரார் தான் நானும் மதுரகாரார் தான். நான் இதே கதையை ஒரு ஐந்து வருடம் கழித்து எடுக்கலாம் என்று முடிவு செய்துவிட்டேன். எனவே, அனைவருக்கும் ஒரே சிந்தனை காரணமாக ஒரே கதை தோன்றலாம் எனவே, யாரும் கதை திருட்டு என்று தவறாக பேசாமல் பேசிக்கொண்டு சமரசமாக வீட்டுக்கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார் சமுத்திரக்கனி.