மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பாகுபலி வசூல் சாதனையை முறியடித்ததா இல்லையா 2.0 திரைப்படம்? முழு விவரம்!
இயக்குனர் சங்கர் இயக்கத்தில், ரஜினி காந்த நடிப்பில் வெளியான திரைப்படம் 2.0. லைகா நிறுவனம் இந்த படத்தை தயாரித்தது. தமிழ் சினிமாவில் அதிக பொருள் செலவில் எடுக்கப்பட்ட முதல் திரைப்படம் 2.0. இந்த படம் இதுவரை பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது.
இந்நிலையில் பாகுபலி இந்திய சினிமாவே வியந்து பார்த்த படம். இப்படம் உலகம் முழுவதும் ரூ 650 கோடி வரை வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது. இதை தொடர்ந்து பாகுபலி இரண்டாம் பாகம் ரூ 1750 கோடி வரை வசூல் செய்தது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த 2.0 உலகம் முழுவதும் ரூ 700 கோடி வசூலை தொட்டுள்ளது.
இதன் மூலம் பாகுபலி முதல் பாகத்தில் வசூலை பின்னுக்கு தள்ளியுள்ளது, மேலும், ஆல் டைம் நம்பர் 6 என்ற இடத்தையும் பிடித்துள்ளது 2.0 திரைப்படம். இப்படம் சீனாவில் ரிலிஸானால் பாகுபலி-2 வசூலையும் பின்னுக்கு தள்ளும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.