மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
விஜயின் அந்த படத்தில் நடித்தது ரம்பாவே கிடையாது... பல வருட ரகசியத்தை பகிர்ந்த இயக்குனர்... வைரல் வீடியோ!!
தமிழில் 1998 ஆம் ஆண்டு இயக்குனர் செல்வபாரதி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் நினைத்தேன் வந்தாய். இந்த படத்தில் ரம்பா, தேவயானி என இரண்டு நடிகைகள் நடித்துள்ளனர். இந்த படத்தில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்தும் பட்டித்தொட்டி எங்கும் செம ஹூட் அடித்தது.
நினைத்தேன் வந்தாய் படத்தில் இடம் பெற்ற வண்ண நிலவே வண்ண நிலவே வருவது நீதானா பாடலில் சுமார் 45 ஷாட்களில் ரம்பாவே இடம்பெறவில்லை என படத்தின் இயக்குநர் செல்வபாரதி வீடியோ ஒன்றில் தெரிவித்துள்ளார். மேலும் படப்பிடிப்பின் போது எனக்கும், ரம்பாவுக்கும் சண்டை வந்ததால் படத்தை முடித்து தராமலேயே தெலுங்கு படம் ஒன்றிற்கு தேதி கொடுத்துவிட்டு நடிக்காமல் சென்றுவிட்டாராம் ரம்பா.
இயக்குனர் செல்வபாரதி எவ்வளவு கூறியும் அதனை கேட்காமல் நடிக்காமல் சென்று விட்டாராம். இதனால் கோபமான செல்வபாரதி ரம்பா கிட்ட இருந்த காஸ்டியூம் டிரஸ்ஸ மட்டும் வாங்கிட்டு வாங்கனு சொல்லி, ஒரு ஜூனியர் நடிகையை வச்சி பாட்டை முடித்தாராம் என பல வருட ரகசியத்தை வீடியோ ஒன்றில் தெரிவித்துள்ளார். இது ரசிகர்களை ஷாக்காக வைத்துள்ளது.
இது தெரியாம இவ்வளவு நாளும் ஜொள்ளு விட்டவனுகளுக்கு சமர்ப்பணம்.. 😂pic.twitter.com/PFN1bPxvoM
— தமிழ் பொழுதுபோக்கு 3.0 🎞️ (@vaangasirikalam) December 10, 2023