96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
இணையத்தில் பட்டையை கிளப்பும் ரவுடி பேபி மேக்கிங் வீடியோ! செம மாஸ்.!
பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், சாய் பல்லவி நடித்த திரைப்படம் மாறி 2 . மாறி முதல் பாகம் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்றதை தொடர்ந்து படத்தின் இரண்டாம் பாகம் வெளியானது. ஆனால், எதிர்பார்த்த அளவில் மாறி 2 படம் வெற்றிபெறவில்லை.
படம் சரியான வரவேற்பை பெறாவிட்டாலும் படத்தில் வந்த ரவுடி பேபி பாடல் உலகளவில் மாபெரும் வெற்றிபெற்றது. இதுவரை 15 கோடிக்கு அதிகமான பார்வைகளை பெற்று அதிக பார்வையாளர்கள் பார்த்த வீடியோ என்ற பெருமையை பெற்றுள்ளது இந்த பாடல்.
யுவன் சங்கர் ராஜா இசை அமைக்க, பிரபுதேவா நடனம் இயக்க, தனுஷ் மற்றும் தீ இந்த பாடலை பாடினர். இசை, குரல் என அனைத்தும் பாடலுக்கு ப்ளஸாக அமைந்தாலும் சாய் பல்லவியின் நடனம் இந்த பாடலுக்கு மிகப்பெரிய ப்ளஸாக அமைந்தது.
இந்நிலையில் இந்த பாடலின் மேக்கிங் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவும் சாதனை படைக்கின்றதா என பொறுத்திருந்து பாப்போம்.