மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
குடிகாரர்கள் 4 விதம், ஒவ்வொன்றும்... அர்ஜுன் தாஸின் ரசவாதி பட ஸ்னீக் பீக் காட்சிகள் உள்ளே.!
டி.என்.ஏ மெக்கானிக் கம்பெனி தயாரிப்பில், மௌனகுரு, மகாமுனி ஆகிய படங்களை எழுதி, இயக்கிய சாந்த குமாரின் இயக்கத்தில் உருவாகியுள்ள ரசவாதி (Rasavathi) படத்தில், நடிகர்கள் அர்ஜுன் தாஸ், தன்யா ரவிச்சந்திரன், சுஜித் சங்கர், ஜிஎம் சுந்தர், சுஜாதா, ரம்யா சுப்ரமணியன், அருள் ஜோதி உட்பட பலர் நடித்து இருக்கின்றன.
வரவேற்பை பெற்று எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ரசவாதி திரைப்படம்:
சரவணன் இளவரசு ஒளிப்பதிவில், சபு ஜோசப் எடிட்டிங்கில், தாமான் இசையில் உருவாகியுள்ள ரசவாதி மே மாதம் 10 ம் தேதி அன்று உலகளவில் வெளியாகிறது. சமீபத்தில் படத்தின் டிரைலர் மற்றும் பாடல் காட்சிகள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், தற்போது ரசவாதி படத்தின் ஸ்னீக் பீக் காட்சிகளின் இரண்டாம் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கைதி திரைப்படத்திற்கு பின்னர் முக்கிய நாயகர்களில் ஒருவராக திரையுலகில் வலம்வரும் அர்ஜுன்தாசுக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது.
அடுத்தடுத்த படிக்கட்டுகளில் ஏறும் அர்ஜுன் தாஸ்:
அவரின் பேச்சு மற்றும் மிரட்டலான குணம் ஆகியவற்றுக்கு தமிழ்நாட்டில் அதிகரித்த ரசிகர்களின் எண்ணிக்கை காரணமாக கிடைத்த ஆதரவு, அர்ஜுன் தாஸின் திரையுலக பயணத்திற்கு முதல் அடிக்கலாகவும் அமைந்து இருக்கிறது.