#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
திருமணத்திற்கு கிழிந்த சேலையை தான் அணிந்தேன்! முன்னணி நடிகை ஓப்பன் டாக்!
தமிழ், தெலுங்கு படங்களில் நடித்துள்ள ராதிகா ஆப்தே தமிழ் சினிமாவில் ஆல் இன் ஆல் அழகுராஜா, டோனி, வெற்றிச்செல்வன் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். தற்போது இவர் இந்தியில் முன்னணி நடிகையாக திகழ்ந்துவருகிறார்.
இவர் கவர்ச்சி வேடங்களிலும் துணிச்சலாக திகழ்ந்துவருகிறார். சமீபத்தில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க நான் தயாராக இருக்கிறேன். இந்தியில் எனக்கு தனி இடம் இருக்கிறது என கூறியிருந்தார். தனது திருமணம் குறித்து சமீபத்தில் பேட்டி அளித்திருந்தார்.
அந்த பேட்டியில், தனது திருமணத்தின் போது எனது பாட்டியின் கிழிந்த புடவையைத்தான் கட்டிக்கொண்டேன். திருமண வரவேற்புக்கு மட்டும் ஒரு டிரெஸ் எடுத்தேன். அதன் விலை வெறும் ரூ.10 ஆயிரம்தான். ஆனால் தற்போதெல்லாம் திருமண உடைகளுக்காகவே டிசைனர் வைத்துக்கொண்டு பல லட்ச கணக்கில் செலவு செய்கிறார்கள்.
நமது நாட்டில் அளவுக்கு மீறி ஆடம்பர செலவு செய்து பலரும் திருமணம் செய்து கொள்கிறார்கள். அதனால் தான் நடுத்தர வர்க்கத்தினர் திருமணம் என்றாலே பயப்படுகிறார்கள் என கூறியுள்ளார்.