96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
அம்மாடியோவ்.. ஸ்பெயினில் விக்கி-நயன் ஜோடி தங்கியிருக்கும் இடத்தின் ஒருநாள் வாடகை மட்டும் இவ்வளவா? ஷாக்கான ரசிகர்கள்!!
தமிழ் சினிமாவில் எக்கசக்கமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக, லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவர் நானும் ரவுடிதான் படத்தில் நடித்தபோது அதன் இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் காதலில் விழுந்தார். பின் இருவருக்கும் கடந்த ஜூன் 9ஆம் தேதி மகாபலிபுரத்தில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டலில் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது.
திருமணம் முடிந்த அன்றே நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஜோடி திருப்பதி தரிசனம் மேற்கொண்டனர். பின் தாய்லாந்தில் ஹனிமூன் என பிஸியாக இருந்தனர். அதனை தொடர்ந்து நயன்தாரா பாலிவுட்டில் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் ஜவான் ஷூட்டிங்கில் கலந்துக் கொண்டார்.
பிறகு நயன் மற்றும் விக்கி ஜோடி ஸ்பெயின் நாட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு கியூட் ஜோடியாக வலம் வரும் அவர்களது புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தற்போது ஐபிஜா தீவிற்கு சுற்றுலா சென்றுள்ளனர். அங்கு அவர்கள் வட முனையில் அமைந்துள்ள பிரபல ஐந்து நட்சத்திர விடுதியான Sixth Sensesல் தங்கியுள்ளனர். இந்த Sixth Senses விடுதியில் ஒரு நாள் மற்றும் தங்குவதற்கு வாடகை இந்திய மதிப்பில் 45,000 ரூபாயாம். அங்கு இருவரும் எடுத்துகொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.