பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்திற்குள் புகுந்த புது வில்லி... வைரலாகும் ப்ரோமோ வீடியோ...
ஜீ தமிழ் தொலைக்காட்சியிலிருந்து விஜய் டிவியில் களமிறங்கிய பிரபல ஜோடி! எந்த நிகழ்ச்சியில் பார்த்தீர்களா!! வைரலாகும் வீடியோ!!

காதலா காதலா என்ற நிகழ்ச்சியில் ஜீ தமிழ் தொலைக்காட்சி பிரபலங்களான ரேஷ்மா மற்றும் மதன் இருவரும் கலந்து கொண்டுள்ளனர்.
பிரபல ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை ஒளிபரப்பாகி வரும் தொடர் ‘பூவே பூச்சூடவா’. இந்த தொடருக்கென ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த சீரியலில் கதாநாயகியாக சக்தி என்ற கதாபாத்திரத்தில் ரேஷ்மா நடித்து வருகிறார். இவர் டான்ஸ் ஜோடி டான்ஸ் என்ற நடன நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தவர்.
இதே சீரியலில் சுந்தர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய கனா காணும் காலங்கள் சீரியலில் நடித்ததன் மூலம் பிரபலமடைந்த நடிகர் மதன். அவர் ஒருசில படங்களிலும் நடித்துள்ளார். இந்த நிலையில் ஒரே சீரியலில் நடித்துவரும் ரேஷ்மா மற்றும் மதன் இருவரும் காதலில் விழுந்துள்ளனர். இதனை இருவரும் புத்தாண்டன்று தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் ரேஷ்மா மற்றும் மதன் இருவரும் விஜய் தொலைக்காட்சியில் காதலர் தினத்தன்று ஒளிபரப்பாகவிருக்கும் காதலா காதலா என்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவுள்ளனர். மேலும் இந்த நிகழ்ச்சியை அர்ச்சனா தொகுத்து வழங்கவுள்ளார். மேலும் பல காதல் பிரபலங்களும் இதில் கலந்து கொள்ளவுள்ளனர். அதுமட்டுமின்றி ஆர்யா மற்றும் சாயிஷா ஜோடியும் இணைந்துள்ளனர். இதுகுறித்த ப்ரமோ வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.