நடிகை யாஷிகாவுடனான காதலை குறித்து மனம் திறந்த ரிச்சர்ட் ரிஷி..



Richard rishi openup about his relationship with yashika

கோலிவுட் திரையுலகில் பிரபல நடிகராக வளர்ந்து வருபவர் ரிச்சர்ட் ரிஷி. இவர் தமிழில் 'பழைய வண்ணாரப்பேட்டை' திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இதன் பின்பு நீண்ட நாட்களாக திரைப்படங்களில் நடிக்காமல் இருந்த ரிச்சர்ட் சமீபத்தில் 'திரௌபதி' திரைப்படத்தில் நடித்தார்.

yashika

சர்ச்சைக்குரிய படமான திரௌபதியில் நடித்து மக்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டு வந்தார். மேலும், முதல் படத்திலேயே இவரின் நடிப்பு பாராட்டப்பட்டது. இப்படத்திற்கு பிறகு தற்போது ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.

மேலும் பிரபல நடிகர் அஜித்தின் மச்சானான ரிச்சர்ட் ரிஷி சமிபத்தில் சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். அதாவது கவர்ச்சி நடிகை யாஷிகாவுடன் காதலில் இருப்பதாக கூறி பல புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு இருக்கிறார். இப்புகைபடங்கள் வைரலாகி வந்தன.

yashika

இந்த விவகாரம் குறித்து தற்போது விளக்கம் அளித்துள்ளார் ரிச்சர்ட். அதாவது இன்ஸ்டாகிராமில் அவர் பதிவிட்டிருக்கும் புகைப்படங்கள் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள். எனக்கும் யாஷிகாவிற்கும் வேறு எந்த விதமான தொடர்பும் இல்லை என்று கூறியிருக்கிறார்.