மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பிரபல நடிகரை வாடா போடா என்று மரியாதை இல்லாமல் பேசிய ஆர் ஜே பாலாஜி.. அதிர்ச்சியடைந்த பட குழுவினர்..
தமிழ் சினிமாவில் அறியப்படும் நடிகராக இருப்பவர் ஆர் ஜே பாலாஜி. இவர் ஆரம்ப கட்டத்தில் வானொலியில் தொகுப்பாளராக பணியாற்றினார். இதன் மூலமே மக்கள் மத்தியில் பிரபலமானார். இதன் பின்பு நடிப்பின் மீது இருந்த ஆர்வத்தினால் சினிமாவில் களமிறங்கினார்.
சினிமாவில் ஆரம்ப காலத்தில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்த ஆர் ஜே பாலாஜி, கதாநாயகனாக முதன் முதலில் 'எல்கேஜி' திரைப்படத்தில் நடித்தார். இதன் பின்பு மூக்குத்தி அம்மன், வீட்டுல விசேஷம் போன்ற திரைப்படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை பிடித்தார்.
இது போன்ற நிலையில், சமீபத்தில் படப்பிடிப்பில் நடந்த சுவாரஸ்யமான சம்பவத்தை பற்றி ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார் ஆர்.ஜே பாலாஜி. அவர் கூறியது, "ஒரு பிரபல ஹீரோ என் நண்பன் தான், அவரும் நானும் ஒரு படத்தின் சூட்டிங்கில் இருந்த போது நான் வாடா போடா என்று அழைத்ததை பார்த்ததும் ஒருவர் என்னிடம் வந்து அப்படி எல்லாம் ஹீரோவை கூப்பிடாதீங்க என்று கூறினார்.
இதே போல் தான் சுந்தர் சிருடன் உட்கார்ந்து சாப்பிட கூடாது என்று கூறினார். சித்தார்த் கிட்ட போய் சொன்னேன்.அவங்க சிரிச்சுட்டு அப்படியெல்லாம் இல்ல.பழைய காலத்து சினிமா அப்படித்தான்.இப்ப மாறிடுச்சு நீங்க அதெல்லாம் பெருசா எடுத்துக்காதீங்க என்று பெருமிதத்துடன் கூறினார்கள்.இவ்வாறு பாலாஜி பேட்டியளித்தார்.