பாக்கியாவிற்கு அடுத்தபடியாக வரும் பெரிய ஆபத்து! அதில் பாக்கியா மீண்டு வருவாரா? ப்ரோமோ வீடியோ இதோ....
தன் வருங்கால கணவருடன் அந்த மாதிரி புகைப்படங்களை வெளியிட்ட ரோபோ சங்கரின் மகள்..

மிமிக்ரி கலைஞராக இருந்த ரோபோ ஷங்கர், கலக்கப்போவது யாரு , அசத்தப்போவது யாரு? நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு, பல குரல்களில் பேசி, மிமக்ரி செய்து மக்களிடம் பிரபலமானார்.
அதன்பிறகு, தமிழ் சினிமாவில் இவருக்கு வாய்ப்புகள் வரத் தொடங்கியதை அடுத்து, தற்போது பிரபல காமெடி நடிகராகவும் உள்ளார். திடீரென்று இவரது உடல் மெலிந்து இருப்பது போன்ற புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின.
ரோபோ ஷங்கரின் மகள் இந்திரஜாவும் பிகில், விருமன் உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். இந்நிலையில், இந்திரஜா தான் பிக் பாஸ் வீட்டிற்கு செல்ல போவதாகத் தெரிவித்துள்ளார்.
இன்னும் சில மாதங்களில் திருமணம் என்று அறிவித்த இந்திரஜா, தற்போது தன் வருங்காலக் கணவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இப்புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.