#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ஜித்தன் ரமேஷ் நடிக்கும், ரூட் நம்பர் 17 படத்தின் பாடல் வீடியோ காட்சிகள் வெளியீடு: படக்குழு இன்ப அதிர்ச்சி.!
அபிலாஷ் ஜி இயக்கத்தில், ஓசேப்பச்சன் இசையில், நேனி என்டர்டெயின்மெண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ரூட் நம்பர் 17.
இப்படத்தில் ஜித்தன் ரமேஷ், அருவி மதன், ஹரீஷ், அஞ்சு பாண்டியா, அகில் பிரபாகர் உட்பட பலரும் நடித்துள்ளனர். படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகிறது.
படத்தின் திகில் காட்சிகள் நிறைந்த டிரைலர் சமீபத்தில் வெளியிடப்பட்டு வைரலாகியது. இந்நிலையில், இப்படத்தின் "ராசா என் ராசா கண்ணே" என்ற பாடல் வெளியாகி இருக்கிறது.
படத்தின் வீடியோ காட்சிகள் படக்குழுவால் வெளியிடப்பட்டுள்ளது. இப்படம் வரும் டிசம்பர் 29ம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.