மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ரொம்ப பதட்டமாக இருக்கு.! செம டென்ஷனில் இருக்கும் நடிகை சமந்தா.! இதுதான் காரணமா??
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா ஹரி-ஹரிஷ் இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் 'யசோதா'. இந்த படம் பான் இந்தியா திரைப்படமாக உருவாகியுள்து. இப்படத்தை ஸ்ரீதேவி மூவிஸ் நிறுவனம் மூலம் சிவலெங்க கிருஷ்ண பிரசாத்
தயாரித்துள்ளார்.
மேலும் யசோதா படத்தில் வரலட்சுமி, ராவ் ரமேஷ், உன்னி முகுந்தன், முரளி சர்மா உள்ளிட்ட பலரும் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். திரில்லர் கதையம்சம் கொண்ட இந்த படம் நாளை நவம்பர் 11ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் நடிகை சமந்தா ப்ரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில் இன்று சமந்தா தனது டுவிட்டர் பக்கத்தில், ரொம்ப பதட்டமாகவும். மிகுந்த எதிர்பார்ப்புடனும் இருக்கிறேன். இன்னும் ஒரு நாள்தான் உள்ளது. என்னை போலவே எனது இயக்குனர், தயாரிப்பாளர், சக நடிகர்கள், படக்குழுவினரும் நாளை உங்களது விமர்சனத்திற்காக காத்திருக்கிறார்கள் என குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.