தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
படத்தில் தூக்கிய மிக்சி, கிரைண்டரை கேக்கில் வைத்த சர்க்கார் படக்குழு; மீண்டும் எழும் சர்ச்சை!
சர்கார் படத்தின் போஸ்டர்கள் வெளியானதிலிருந்தே பிரச்சனைகள் தொடங்கிவிட்டது. விஜய் புகைபிடிப்பதை ஊக்குவிப்பதாக எதிர்ப்புகள் கிளம்பின. பின்னர் படங்கள் இணையத்தில் இருந்து நீக்கப்பட்டது.
இந்நிலையில் தீபாவளி அன்று வெளியான சர்க்கார் படம் ஆளும் கட்சியை மிகவும் விமர்சிப்பதாக எதிர்ப்புகள் கிளம்பின. தமிழக அரசியல் பிரமுகர்கள் குறிப்பாக ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள் படத்திற்கு எதிராக போர் கொடி தூக்கினர்.
மேலும் படத்தில் தேவை இல்லாத காட்சிகள் இருப்பதாகவும், அதை நீக்காவிட்டால் சர்க்கார் படம் தடைசெய்யப்படும் எனவும் அமைச்சர் கடம்பூர் ராஜு எச்சரிக்கை விடுத்திருந்தார்.
மேலும் சர்க்கார் படத்தில் படத்தின் வில்லியாக வரும் வரலக்ஷ்மி சரத்குமார் பெயர் கோமலவல்லி. இந்த பெயர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இயற்பெயர் என்று செய்திகள் வெளியாகின.
இதனையடுத்து சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க படக்குழு சம்மதம் தெரிவித்தது. சர்க்கார் படத்தில் மிக்ஸி, க்ரைண்டர், மின்விசிறி ஆகியவற்றை தூக்கி நெருப்பில் எரியும் காட்சிகள் நீக்கப்பட்டன.
Sarkar team get together 🍽☑️ pic.twitter.com/XMXYnwcBnP
— A.R.Rahman (@arrahman) 11 November 2018
இதனையடுத்து சர்க்கார் படக்குழுவினர் வெற்றி விழா கொண்டாடியுள்ளனர். விழாவில் நடிகர் விஜய், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், நடிகைகள் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, பாடலாசிரியர் விவேக் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
அந்த விழாவில்,மிக்சி, கிரைண்டர் வடிவிலான கேக்குகளை வெட்டி வெற்றி விழா கொண்டாடியுள்ளனர். சர்கார் படத்தில் இடம்பெற்றிருந்த இலவசப் பொருட்களை எரிக்கும் காட்சிக்கு அதிமுகவினரிடையே கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், இந்த வெற்றி விழாவை சர்கார் படக்குழுவினர் கொண்டாடியுள்ளனர்.