திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
அடேங்கப்பா.. வேற லெவல்! செந்தில் கணேஷ்-ராஜலட்சுமி கட்டியுள்ள பிரமாண்ட வீட்டை பார்த்தீங்களா! வைரல் வீடியோ!!
பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி ரசிகர்களை பெருமளவில் கவர்ந்த நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். இதில் ஜூனியர் சீனியர் என ஏராளமான சீசன்கள் நடைபெற்றுள்ளது. சூப்பர் சிங்கர் சீனியர் 6வது சீசனில் போட்டியாளர்களாக கலந்து கொண்டு நாட்டு புற இசையின் மூலம் மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர்கள் செந்தில் கணேஷ் மற்றும் ராஜலட்சுமி தம்பதியினர்.
இவர்களில் செந்தில் கணேஷ் நிகழ்ச்சியின் இறுதிவரை சென்று பட்டத்தை வென்றார். அதனை தொடர்ந்து அவருக்கு தமிழ் சினிமாவில் பல படங்களில் பாடும் வாய்ப்பு குவிந்தது. செந்தில் மற்றும் ராஜலட்சுமி சார்லி சாப்ளின் 2 படத்தில் பாடிய சின்ன மச்சான் பாடல் இன்றுவரை பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்புகிறது. மேலும் சமீபத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா படத்தில் ராஜலட்சுமி பாடிய ஏ சாமி பாடல் ரசிகர்கள் மத்தியில் செம ஹிட்டானது.
தற்போது பெரும் பிரபலமாக இருக்கும் அவர்கள் மிகவும் பிரம்மாண்டமாக புதிய வீட்டை கட்டியுள்ளனர். அந்த வீட்டின் புதுமனை புகுவிழாவிற்கு தங்களது வாழ்க்கையில் வெளிச்சத்தை கொடுத்த சூப்பர் சிங்கர் இயக்குனர் ரவூபா வருகை தந்து குத்துவிளக்கை ஏற்றி வைத்துள்ளார். இந்த வீடியோவில் அவர்கள் சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்த நிலையில் அது வைரலாகி வருகிறது.