சன் தொலைக்காட்சி சீரியல் நடிகருடன் அடுத்த திருமணம் ..! சஞ்சீவை ஏமாற்றிய ஆல்யா..?



Serial actor alya fun with his husband sanjeev

ஆல்யா மானசா பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட ' மானாட மயிலாட ' நடன நிகழ்ச்சி மூலம் அறிமுகமானார். மேலும் இவர் பல ஆல்பம் பாடல்கள் மற்றும் சில படங்களிலும் நடித்திருக்கிறார். இருந்த போதிலும் ஆல்யா மக்கள் மத்தியில் பிரபலமாகவில்லை.அதன் பின் விஜய் தொலைக்காட்சியில் 'ராஜா ராணி' என்ற சீரியலில் நடித்தார். இந்த தொலைக்காட்சி தொடரில் நடித்ததன் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தார்.

ஆல்யா

இத்தகைய நிலையில் இந்த சீரியலில் நடித்த நடிகர் தான் சஞ்சீவ். அவரையே காதலித்து ஆல்யா திருமணம் செய்து கொண்டார். இதன் பிறகு ராஜா ராணி தொடர் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் போதே ஆல்யா கற்பமானார். இந்த காரணத்தினால் ராஜா ராணி தொடர் முடிவுக்கு வந்தது. சில காலம் கழித்து ராஜா ராணி 2 ஆரம்பிக்கப்பட்டது. இதிலும் ஆல்யாவையே நடிக்க  ஒப்பந்தம் செய்யப்பட்டது.

ராஜா ராணி 2 சூட்டிங் ஆரம்பிக்கப்பட்டு சீரியல் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் இவர் மீண்டும் கர்ப்பாமாகினார். இதனால் ஆல்யா நடித்த கதாபாத்திரத்தில் வேறொரு நடிகை நடிக்க ஒப்பந்தமாகி தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. தற்போது ஆல்யா மற்றும் சஞ்சீவ் தம்பதிகளுக்கு இரு குழந்தைகள் உள்ள நிலையில் மீண்டும் ஆல்யா சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இனியா தொடரில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார்.

ஆல்யா

இதுபோன்ற நிலையில், ஆல்யா தனக்கு வேறொரு திருமணம் நடைபெற்று விட்டது என்று அவரது கணவரான சஞ்சீவை வெறுப்பேற்றி வீடியோ வெளியிட்டிருக்கிறார். பதிலுக்கு சஞ்சீவும் அவரை கலாய்த்துள்ளார். இந்த வீடியோவை இணையத்தில் பதிவிட்ட சில மணி நேரத்திலேயே சஞ்சீவை ஏமாற்றிய  ஆல்யா என்று ரசிகர்கள் நக்கலாக கமெண்ட் செய்து வருகின்றனர். இனியா தொடரில் ஆல்யாவிற்கு திருமணம் நடப்பது போன்ற காட்சிகளை எடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.