மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நான் ஆர்யனை திருமணம் செய்ய இதுதான் காரணம்... சீரியல் நடிகை ஷபானா ஓபன் டாக்!!
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு பெற்ற தொடர் செம்பருத்தி. இந்த தொடரில் கதாநாயகியாக பார்வதி என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மனதை பெருமளவில் கவர்ந்தவர் ஷபானா. இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மிஸ்டர் மனைவி என்ற தொடரின் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்நிலையில் ஷபானா விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் முதலில் செழியன் கதாபாத்திரத்தில் நடித்த ஆர்யனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
தற்போது நடிகை ஷபானா,ஆர்யனை திருமணம் செய்து கொண்டதற்கு இது தான் முக்கிய காரணம் என பேசியுள்ளார். அதாவது செம்பருத்தி சீரியலில் இந்து பெண்ணாக நடித்து பொட்டு வைத்து கொண்ட காரணத்தால் தன்னுடைய குடும்பத்தினர் தன்னுடன் ஒரு ஆண்டு காலம் பேசாமல் இருந்தனர். மேலும் இந்து பையனை திருமணம் செய்ய கூடாது எனவும் வலியுறுத்தி வந்துள்ளனர்.
அதன் காரணமாகவே ஒரு இந்து பையனை தான் திருமணம் செய்ய முடிவு எடுத்ததாகவும் பின்னர் ஆர்யனுடன் காதல் ஏற்பட்டதால் அவரை திருமணம் செய்து கொண்டதாக பேசியுள்ளார்.