#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
முதல் நாளிலேயே மரண அடி வாங்கிய ஷாருக்கானின் டன்கி திரைப்படம்.. அதிர்ச்சியில் படக்குழு.!
இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர் ஷாருக்கான். இந்த ஆண்டு அவருக்கு மிகச் சிறந்த ஆண்டாக அமைந்துள்ளது. அதன்படி இந்த ஆண்டில் வெளியான அவரது பதான் மற்றும் ஜவான் ஆகிய 2 திரைப்படங்களும் 1000 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.
இதனையடுத்து தற்போது இதே ஆண்டில் ஷாருக்கான் நடிப்பில் டன்கி திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியது. இந்த திரைப்படத்தை பிரபல இயக்குனர் ராஜ்குமார் இராணி இயக்கியிருந்தார். இந்த திரைப்படம் கலையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
இந்த நிலையில் ஷாருக்கானின் டன்கி திரைப்படம் முதல் நாளில் 30 கோடி ரூபாய் மட்டுமே வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று வேலை நாள் என்பதால் இந்த வசூல் குறைவு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.