மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நீதான் வந்து செஞ்சுவிட்டியா? தன்னை இழிவாக பேசிய இளைஞருக்கு மூக்குடைக்கும் பதிலடி கொடுத்த நடிகை ஷிவானி!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல்நிலவு என்ற தொடரில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் ஷிவானி. அதனைத் தொடர்ந்து அவர் ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தொடரில் நடித்து வந்தார். இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் பிசியாக இருக்கும் அவர் சமீபகாலமாக நாள்தோறும் கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.
மேலும் ஷிவானி விஜய் தொலைக்காட்சியில் விரைவில் தொடங்கவிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவிருப்பதாகவும், அதற்காக தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த நிலையில் ஷிவானி சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் தனது ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்துள்ளார்.
அப்பொழுது இளைஞர் ஒருவர் பிளாஸ்டிக் சர்ஜரி மூஞ்சி என ஷிவானியை மோசமாக கிண்டல் செய்துள்ளார். அதற்கு அவர் நீங்கதான் எனக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்தீர்களா? மற்றவர்களைப் பற்றி நன்கு தெரியாமல் தேவையில்லாமல் வார்த்தைகளை விடாதீர்கள் என பதிலளித்துள்ளார்.