மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அறிமுகநாயகியும், சிலம்பரசனும் காதலா.?! பாங்காங் பயணத்தால் அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
முன்னணி நடிகரான சிம்பு குழந்தையிலிருந்தே கோலிவுட் திரையுலகில் நடித்து வருகிறார். இதன் பின் 2002ஆம் ஆண்டு சிம்புவின் தந்தை T.ராஜேந்திரன் இயக்கிய காதல் அழிவதில்லை படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.
இதனை தொடர்ந்து பல வெற்றி படங்களில் நடித்து STR, சிலம்பரசன் போன்ற துணை பெயர்களில் ரசிகர்கள் இவரை அழைத்து வந்தனர். 2006 இல் வெளிவந்த வல்லவன் திரைப்படத்தில் சிம்பு கதாநாயகனாகவும், நயன்தாரா கதாநாயகியாகவும், நடித்திருந்தார்கள். இப்படத்திலிருந்து இருவரும் காதலித்து வந்தனர் என்று பேசப்பட்ட நிலையில் இப்படத்தின் ரிலீஸிற்கு பிறகு இருவரும் பிரிந்துவிட்டனர்.
இத்தகைய நிலையில் 2021 ஆம் வருடம் ஜெயம் ரவி நடித்து வெளிவந்த பூமி திரைப்படத்தின் மூலம் நிதி அகர்வால் கதாநாயகியாக கோலிவுட் திரையுலகிற்கு அறிமுகமானார். இப்படத்திற்குப் பிறகு சிம்புவுடன் இணைந்து ஈஸ்வரன் படத்தில் நடித்திருந்தார். இப்படத்திலிருந்தே இருவரை பற்றியும் கிசு கிசு வந்து கொண்டிருந்தது.
தற்போது பத்து தல படத்தின் படப்பிடிப்பிற்கு பிறகு மார்ஷல் ஆர்ட்ஸ் கலையை கற்பதற்காக பாங்காங் சென்று இருக்கிறார். இந்த நிலையில் நிதி அகர்வாலும் எந்த பட வாய்ப்பும் இல்லாத காரணத்தினால் பாங்காங்கிற்கு சென்று இருக்கிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது. இருவருக்கும் ஒரே நேரத்தில் பாங்காங்கில் என்ன வேலை என்று நெட்டிசன்கள் கலாய்த்து கொண்டிருக்கின்றனர்.