#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
சிம்புவின் மாநாடு படத்தில் இவர்தான் கதாநாயகியா? அப்போ அவர் இல்லையா?
வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தை அடுத்து மாநாடு படத்தில் நடிக்கவுள்ளார் சிம்பு. நீண்ட எதிர்பார்ப்பு, அதிக சர்ச்சைகளுக்கு நடுவே வெளியான வந்தா ராஜாவாதான் வருவேன் படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றிபெறவில்லை. லைகா நிறுவனம் தயாரிப்பில், சுந்தர் சி இயக்கிய இந்த திரைப்படம் தோல்வி படமாகவே அமைந்தது.
தற்போது மாநாடு படத்திற்கு தயாராகிவருகிறார் சிம்பு. இந்த படத்திற்காக புது கலைகளை கற்றுக்கொள்ள சிம்பு வெளிநாட்டு சென்றதாகவும் செய்திகள் வெளிவந்தன. இந்நிலையில் சிம்புவின் மாநாடு படத்தில் கதாநாயகியாக யார் நடிக்கிறார் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
முதலில் சிம்புவுக்கு ஜோடியாக நடிகை ராஷிகண்ணாவை நடிக்க வைக்க படக்குழு பரிசீலித்து வருவதாக கூறப்பட்டது. ஆனால் '96 ' படத்திற்குப்பின் த்ரிஷா மீதான மோகம் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்திருப்பதால் த்ரிஷாவையே 'மாநாடு' படத்தில் கதாநாயகியாக நடிக்க வைக்கலாம் என ஆலோசிக்கப்படுவதாக தெரிகிறது.