திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
இதெல்லாம் கேவலமாக இல்லையா? விஷ்ணுகாந்த்- சம்யுக்தா விவகாரம்! வெளுத்து வாங்கிய பாடகி ராஜலட்சுமி!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சிப்பிக்குள் முத்து என்ற தொடரில் நடித்த நடிகர் விஷ்ணுகாந்த் மற்றும் சம்யுக்தா இருவரும் ஏழு மாதங்களாக காதலித்து வந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் திருமணமான 15 நாட்களிலேயே இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர்.மேலும் அவர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்த தங்களது திருமண புகைப்படங்கள் மற்றும் இருவரும் ஒன்றாக இருந்த புகைப்படங்கள் அனைத்தையும் நீக்கினர்.
தொடர்ந்து பல லைவ் வீடியோக்களில் ஒருவரை ஒருவர் மாறி மாறி மோசமாக குற்றம் சாட்டிக் கொண்டனர். சம்யுக்தா விஷ்ணுகாந்த் தனக்கு செக்ஸ் தொல்லை கொடுத்ததாகவும், அவர் காமகாட்டேரி எனவும் கூறியிருந்தார். மேலும் விஷ்ணுகாந்த் சம்யுக்தாவுக்கு தனக்கு முன்பே பல ஆண்களுடன் தொடர்பு இருந்ததாகவும், அதற்கான ஆதாரங்கள் தன்னிடம் உள்ளதாகவும் குற்றம் சாட்டி இருந்தார். இந்நிலையில் இவர்களது விவகாரம் குறித்து தற்போது பாடகி ராஜலட்சுமி பகிரங்கமாக திட்டி பேசி உள்ளார்.
அவர் கூறியதாவது, தங்களது சொந்த பிரச்சினையை இப்படி மீடியாவிற்குள் கொண்டு வந்தது கேவலமாக இல்லையா? தங்களுக்குள் பேசி தீர்த்துகொள்ள வேண்டிய அந்தரங்க விஷயத்தை எல்லாம் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பார்க்கும் சோசியல் மீடியாவில் பேசி தன்னைத்தானே நியாயப்படுத்தி கொள்வதாக நினைத்து, தங்களை தவறாக காட்டிகொள்கின்றனர்.
இவ்வாறு அருவருக்கத்தக்க நடந்து கொள்வதற்கு பதிலாக பேசாமல் இருவரும் விவாகரத்து வாங்கிக் கொண்டு பிரிந்து இருக்கலாம். பக்குவம் இல்லாமல் தங்களது பிரச்சினைகளை அவர்கள் இப்படி பகிரங்கமாக வெளிப்படுத்தியிருப்பது அவர்களது பலவீனமான மனதை காட்டுகிறது என பேசியுள்ளார்.