கோவையில் பயங்கரம்.. குடியிருப்பு வளாகம் அருகே இளைஞர் வெட்டிப்படுகொலை.. அச்சத்தில் மக்கள்.!



in Coimbatore Youth Killed by Gang 08 January 2025 

குடியிருப்பு வளாகம் அருகே இளைஞர் ஒருவர் மூவர் கும்பலால் கொல்லப்பட்டார்.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளளூர் பகுதியில் வசித்து வருபவர் இன்பரசன் (வயது 18). இவர் அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் வசித்து வருகிறார்.

இதனிடையே, இன்று குடியிருப்பு பகுதிக்கு வந்துகொண்டு இருந்த இன்பரசனை, 3 பேர் கொண்ட மர்ம நபர்கள் விரட்டி-விரட்டி கொலை செய்துள்ளனர். 

இதையும் படிங்க: பிரியாணியில் பூச்சி?.. இன்ஸ்டாகிராமில் வீடியோ ரிலீஸ் செய்த இளைஞர்.. சிசிடிவியில் ஷாக் உண்மை.! 

Coimbatore

காவல்துறை விசாரணை

அவர் வசித்து வந்த குடியிருப்பு பகுதிக்கு அருகேயே இந்த சம்பவம் நடந்ததால், அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்திற்கு உள்ளாகினர். இந்த விஷயம் குறித்து காவல்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. 

தகவலின் பேரில் நிகழ்விடத்திற்கு விரைந்த போத்தனூர் காவல்துறையினர், இன்பரசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

குற்றவாளிகளை கைது செய்ய 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக கோவை மாநகர ஆணையர் சரவணன் சுந்தர் விளக்கம் அளித்துள்ளார். இந்த விஷயம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது. 

குற்றவாளிகள் கைது செய்யப்பட்ட பின்னரே கொலைக்கான காரணம் தெரியவரும் என அதிகாரிகள் கூறுகின்றனர். 

இதையும் படிங்க: மணக்கோலத்தில் பார்க்க வேண்டிய மகனை சவக்கோலத்தில் பார்த்த பெற்றோர்.. போதை ஆசாமிகளால் சோகம்.!