மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சதிச்செயலை கண்டறிந்து மீள்வரா முத்து? வெளுத்து வாங்கிய .. சிறகடிக்க ஆசை தொடர் ப்ரோமோ வைரல்.!
கோமதி பிரியா, வெற்றி வசந்த், பாக்கியலட்சுமி, ப்ரீத்தா ரெட்டி, அணிலா ஸ்ரீகுமார் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க ஒளிபரப்பு செய்யப்பட்டு வரும் விஜய் டிவி நெடுந்தொடர் சிறகடிக்க ஆசை.
கடந்த வாரத்தில் இத்தொடரில் முத்துவை அவரின் தாயார் மற்றும் அண்ணன், அவரின் மனைவி ஆகியோர் சதிச்செயலில் சிக்கவைக்க பலகட்ட போராட்டங்களை முன்னெடுத்து வந்தனர்.
முத்து - மீனா ஜோடியை வீட்டில் இருந்து வெளியேற்ற தேவையான பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இந்நிலையில், அடுத்த வாரத்திற்கான ப்ரமோவில், மது குடிக்காத முத்துவை மதுகுடித்ததாக சர்ச்சையில் சிக்க வைத்துள்ளனர்.
முன்னதாக மீனாவின் கடையை சதியில் ஈடுபட்டு எடுக்கவைத்தவர்கள், தற்போது முத்துவின் வேலைக்கும் ஆப்பு வைக்க செய்த காரியத்தால் முத்து காவல் நிலையத்தில் தவிக்கிறார். அவரின் தாய் அவர்களை வெளியே செல்ல அறிவுறுத்துகிறார்.
இதனால் வரும் வாரத்தில் சதிச்செயலில் இருந்து முத்து மீள்வாரா? அவருக்கு இவ்வுளவுநாள் உறுதுணையாக இருந்த அவரின் அப்பாவே அடித்ததால் அடுத்தடுத்து நடக்கப்போகும் துயரம் என்ன? என்பது தொடர்பான காட்சிகள் இடம்பெற்றுள்ளது.