திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
வாவ்.. கியூட்டா இருக்கே! நடிகர் சிவகார்த்திகேயனின் 3வது குழந்தையின் பெயர் என்ன தெரியுமா?? ரசிகர்களை கவர்ந்த வீடியோ!!
சின்னத்திரையில் தொகுப்பாளராக களமிறங்கி பின்னர் தனது தீராத கடின உழைப்பால், விடாமுயற்சியால் தற்போது வெள்ளித்திரையில் முன்னணி நட்சத்திரமாக ஜொலிப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவருக்கென சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. சிவகார்த்திகேயன் நடிப்பில் இறுதியாக வெளிவந்த அயலான் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையே பெற்றது.
மூன்றாவது குழந்தைக்கு அப்பாவான சிவகார்த்திகேயன்
அதனை தொடர்ந்து அவர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அமரன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். தொடர்ந்து சிவகார்த்திகேயன் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார். நடிகர் சிவகார்த்திகேயனின் மனைவி ஆர்த்தி. அவர்களுக்கு ஆராதனா என்ற மகளும், குகன் தாஸ் என்ற மகனும் உள்ளனர்.
இதையும் படிங்க: படுக்கையறை காட்சிக்கு தயார்.! ஆனால், நடிகை அனுபமா பரமேஸ்வரனின் பிடிவாதம்.!?
பெயர்சூட்டு விழா
இந்த நிலையில் ஆர்த்தி மீண்டும் மூன்றாவது குழந்தைக்கு கர்ப்பமாக இருந்த நிலையில் கடந்த மாதம் அவர்களுக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் தற்போது மிகவும் கோலாகலமாக குழந்தைக்கு பெயர் சூட்டும் விழா நடைபெற்றுள்ளது. சிவகார்த்திகேயன்_ ஆர்த்தி தம்பதியினர் தங்களது குழந்தைக்கு பவன் என அழகிய பெயரை சூட்டியுள்ளனர். இதுகுறித்து சமூக வலைத்தளப் பக்கத்தில் தெரிவித்த நிலையில் ரசிகர்கள் பலரும் அவர்களுக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.
Aaradhana - Gugan - PAVAN ❤️❤️❤️ pic.twitter.com/T0YNorVIQb
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) July 15, 2024
இதையும் படிங்க: அச்சச்சோ... அட்டிட்யூட் காட்டும் கமல் பட நாயகி.? இப்படியே போனா சீரியல் தான்.!! கலாய்க்கும் நெட்டிசன்கள்.!!