மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அச்சச்சோ... அட்டிட்யூட் காட்டும் கமல் பட நாயகி.? இப்படியே போனா சீரியல் தான்.!! கலாய்க்கும் நெட்டிசன்கள்.!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் பிரியா பவானி சங்கர். சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு வந்த இவர் அடுத்தடுத்து படங்கள் கமிட் ஆனதால் தமிழ் சினிமாவின் பிசியான ஹீரோயினாக வலம் வந்தார். தற்போது இவரது திரைப்படங்கள் அடுத்தடுத்து தோல்வியை சந்தித்து இருப்பதால் மீண்டும் செய்தி வாசிக்க போகிறாரா.? என நெட்டிசன்கள் கலாய்த்து வருவது பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.
சின்னத்திரை டு கோலிவுட்
ஜெயா டிவியில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமான பிரியா பவானி சங்கர் கல்யாணம் டு காதல் என்ற தொடர் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இதனைத் தொடர்ந்து மேயாத மான் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். இவர் தமிழ் சினிமாவில் அறிமுகமானதும் அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி கோடம்பாக்கத்தில் பிசியான நடிகையாக வலம் வந்தார்.
முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி
மேயாத மான் திரைப்படத்தை தொடர்ந்து தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களான அருண் விஜய், ராகவா லாரன்ஸ், சிம்பு என முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக பல திரைப்படங்களில் நடித்து வந்தார். தற்போது வெளியான இந்தியன் 2 திரைப்படத்திலும் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் இவர்.
இதையும் படிங்க: "அடி மேல் அடி.." ட்ராப் ஆகிறதா சூர்யா 44.? வெளியான அதிர்ச்சி தகவல்.!!
திடீர் சரிவு
இந்நிலையில் இவர் நடித்த திரைப்படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. மேலும் சமீபத்தில் வெளியான இந்தியன் 2 திரைப்படத்திலும் இவரது கதாபாத்திரம் சில நிமிடங்களே இருக்கிறது. மேலும் இவர் ஆட்டிட்யூட் காட்டி வருவதால் பிரியா பவானி சங்கர் மீண்டும் செய்தி வாசிக்க சென்று விடுவார் என இணையதள வாசிகள் கிண்டல் செய்து வருகின்றனர். தற்போது சுதாகரித்து அவர் சரி செய்யவில்லை என்றால் சினிமாவில் இருந்து சீக்கிரம் ஓரம் கட்டப்படுவார் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: காசுக்காக திருமணம் செய்தாரா வரலட்சுமி.? நெட்டிசன்களுக்கு சரத்குமார் பதிலடி.!!