வரலாறு பேசும்.! மிகுந்த வருத்தத்துடன் சிவகார்த்திகேயன் வெளியிட்ட பதிவால் சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்!!



sivakarthickeyan tweet about india team

இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக்கோப்பை முதல் அரையிறுதி போட்டி நேற்றைக்கு முதல் நாள் தொடங்கி நியூசிலாந்து பேட்டிங் செய்தபோது மழையின் காரணமாக போட்டிகள் நிறுத்தி வைக்கப்பட்டது. மேலும் மீதமுள்ள ஆட்டங்கள் நேற்று நடைபெற்ற நிலையில் நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 239 ரன்கள் எடுத்தது. 

எளிமையான இலக்கை வென்றுவிடலாம் என்ற கனவோடு பேட்டிங்கை துவங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி கொடுத்தது நியூசிலாந்து அணி. மேலும் அடுத்தடுத்ததாக முக்கிய பேட்ஸ்மேன்கள் ஆட்டமிழந்த நிலையில் இந்திய ரசிகர்கள்  நம்பிக்கையை இழந்து மிகுந்த வருத்ததில் இருந்தனர்.

sivakarthickeyan

இந்த நிலையில் அவர்களை தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கும் தோனியும், ஜடேஜாவும் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி மீண்டும் நம்பிக்கையை கொடுத்தனர்.ஆனால் அவர்களும் விக்கெட்டை இழந்து வெளியேறியதை தொடர்ந்து  இந்தியா 18  ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. 

sivakarthickeyan

இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் இந்திய அணிக்கு ஆறுதல் கூறி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் எந்த ஒரு அணியாலும் 3 விக்கெட்டுக்கு 5 ரன்கள் என்ற நிலையிலிருந்து  போராடி இந்த அளவிற்குமுன்னேறியிருக்க முடியாது. ஆனால் நாம் செய்துள்ளோம். வரலாறு எப்போதும் போராளிகளைத்தான் நினைவில் கொள்ளும். தோனி, ஜடேஜா மற்றும் இந்திய அணியை  எண்ணி பெருமை கொள்கிறோம். தனிப்பட்ட முறையில் நான் ரோஹித் சர்மாவுக்கும், பும்ராவுக்கும் பரம ரசிகர்கள். என்றுமே அச்சமில்லாத கேப்டன் கோலி நல்ல பணி என பதிவிட்டுள்ளார்.