மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நடிகர் சிவகார்த்திகேயனுக்கு இரண்டாவது குழந்தை பிறந்தாச்சு!! என்ன குழந்தை தெரியுமா?? வைரல் புகைப்படம்..
தங்களுக்கு ஆண் குழந்தை பிறந்திருப்பதாக நடிகர் சிவகார்த்திகேயன் தனது டிவிட்டர் பக்கத்தி தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் சிவகார்த்திகேயன் ஆர்த்தி என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதியினருக்கு ஏற்கனவே ஆராதனா என்ற பெண் குழந்தை உள்ள நிலையில், தற்போது இரண்டாவது முறையாக தந்தையாகியுள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன்.
சிவகார்த்திர்க்கேயன் - ஆர்த்தி தம்பதினாயிருக்கு தற்போது அழகான ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள சிவகார்த்திகேயன், "8 வருடங்களுக்குப் பிறகு இன்று என் அப்பா என் விரல் பிடித்திருக்கிறார் என் மகனாக…என் பல வருட வலி போக்க தன் உயிர்வலி தாங்கிய என் மனைவி ஆர்த்திக்கு கண்ணீர்த்துளிகளால் நன்றி.. அம்மாவும் குழந்தையும் நலம்" என பதிவிட்டுள்ளார்.
சிவகார்த்திகேயனின் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள், அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துவருகின்றனர்.
18 வருடங்களுக்குப் பிறகு இன்று என் அப்பா என் விரல் பிடித்திருக்கிறார் என் மகனாக…என் பல வருட வலி போக்க தன் உயிர்வலி தாங்கிய என் மனைவி ஆர்த்திக்கு கண்ணீர்த்துளிகளால் நன்றி🙏 அம்மாவும் குழந்தையும் நலம்🙏👍❤️😊 pic.twitter.com/oETC9bh6dQ
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) July 12, 2021