தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
"என்னை ரசித்த மக்கள் மனதில் மீண்டும் ஒரு இடம் கிடைத்துவிட்டது" எஸ்.ஜே சூர்யா உருக்கம்.!
கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் "மார்க் ஆண்டனி". படத்தில் விஷால், எஸ் ஜே சூர்யா, ரித்து வர்மா, சுனில் வர்மா, செல்வராகவன், ரெடின் கிங்ஸ்லி என பெரும் பட்டாளமே நடித்துள்ளனர்.
ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள படம், டைம் டிராவல் மூலம் நடக்கும் விஷயங்களை அடைப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இதில் விஷால் மற்றும் எஸ் ஜே சூர்யா இருவரும் தந்தை - மகன் கேரக்டரில் இரட்டை வேடங்களில் நடித்து பட்டையைக் கிளப்பியுள்ளனர்.
இதில் எஸ் ஜே சூர்யாவின் நடிப்பு பெரும் வரவேற்பை பெற்று, படம் 100கோடி வசூலை எட்டியுள்ள நிலையில், படத்தின் வெற்றி விழா நேற்று நடந்தது. அதில் பேசிய எஸ் ஜே சூர்யா, "மார்க் ஆண்டனி படம் மூலம் அனைவரையும் சிரிக்க வைத்துள்ளது எனக்கு மன நிறைவைத் தந்துள்ளது.
நான் ஒரு சிறந்த நடிகனாக வர வேண்டுமென்று ஆசைப்பட்டேன். அப்போது நான் நடித்த படங்கள் 1கோடிக்கு வியாபாரம் ஆனது. இப்படி உச்சத்திற்கு போன வேகத்தில் கீழே விழுந்துவிட்டேன். ஆனால் அப்போது என்னை ரசித்த மக்கள் மனதில் தற்போது மீண்டும் ஒரு இடம் கிடைத்துவிட்டது" என்று உருக்கமாக பேசினார்.