மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நடிகர் சூர்யாவின் சூரரை போற்று படம் எப்போது வெளியாகிறது?. படக்குழு வெளியிட்ட அதிரடி விளக்கம்!
சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சூரரைப் போற்று. இந்த திரைப்படத்தில் அபர்ணா, மோகன் பாபு, ஊர்வசி, கருணாஸ் உள்ளிட்ட பலரும் சூர்யாவுடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் ஜிவி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்தியாவில் முதல் பட்ஜெட் விமானப் பயணத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி இந்த படம் உருவாகியுள்ளது.
இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தலால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில், சூரரை போற்று படம் வெளியாகாமல் உள்ளது. மேலும் சமீபத்தில் படத்தின் தணிக்கைப் பணிகள் முடிவடைந்து 153:04 நிமிடங்கள் ஓடிக்கூடிய இந்த படத்தில் எந்த இடத்திலெல்லாம் வசனங்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது உள்ளிட்ட விவரங்களும் வெளிவந்தது.
இந்தநிலையில் சூரரைப்போற்று திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகவிருப்பதாக தகவல்கள் பரவி வந்தது. ஆனால் அதற்கு படக்குழுவினர் மறுப்பு தெரிவித்துள்ளனர். மேலும் சூரரை போற்று படத்தை ஓடிடியில் வெளியிடும் திட்டம் இல்லை எனவும், தியேட்டரில் தான் ரிலீசாகும் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும் கொரோனா ஊரடங்கு முடிவடைந்து தியேட்டர்கள் திறக்கப்பட்டதும் படம் ரிலீசாகும் தேதி குறித்த தகவல்கள் வெளியாகும் எனவும் தெரிவிக்கபட்டுள்ளது.