#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
எல்லாம் பொய்! நம்பாதீங்க.. தீயாய் பரவிய வதந்தி! அதிரடி பதிலால் முற்றுப்புள்ளி வைத்த பரோட்டா சூரி!
இன்றைய தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக விளங்குபவர் நடிகர் சூரி. பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ள இவர் வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தில் வந்த பரோட்டா காமெடி மூலம் தமிழ் சினிமாவில் பெருமளவில் பிரபலமானார். அதனை தொடர்ந்து அவர் பரோட்டா சூரி என்று அழைக்கப்பட்டார்.
அதனைத்தொடர்ந்து அவர் விஜய், சூர்யா, விஷால் என தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்கள் படத்தில் முன்னணி நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார். மேலும் இவர் இன்று புகழின் உச்சியில் இருந்து வருகிறார். ரசிகர்களிடையே தனி இடத்தை பெற்ற இவருக்கென ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது.
மேலும் சூரி மதுரையில் அய்யன், அம்மன் என்ற ஹோட்டல்களை நடத்தி வருகிறார். இந்நிலையில் அவர் தற்பொழுது 90 கால கட்டங்களில் பல முன்னணி நடிகர்களுடன் ஏராளமான வெற்றி திரைபடங்களில் நடித்து ரசிகர்களின் கனவு கன்னியாக கொடிகட்டி பறந்த நடிகை மீனாவின் வீட்டை வாங்கியுள்ளதாக தகவல்கள் பரவியது.
அதாவது சென்னையில் சாலிகிராமத்தில் உள்ள நடிகை மீனாவின் வீட்டை நடிகர் சூரி சுமார் 6.5 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளதாக தகவல்கள் பரவி வந்தது. இந்நிலையில் அதனை சூரி மறுத்துள்ளார். மீனா விட்டை வாங்கியதாக வெளியான தகவலில் உண்மை இல்லை. வெறும் வதந்திதான். சமீபத்தில் சென்னையில் நான் எந்த சொத்தையும் வாங்கவில்லை என்று சூரி கூறியுள்ளார்.