மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
உடம்பில் எந்த இடத்தில் பிளாஸ்டிக் சர்ஜரி! ரசிகரின் கேள்விக்கு ஓபனாக பதிலளித்த ஸ்ருதி ஹாசன்!
தமிழ் சினிமாவில் விஜய், சூர்யா, தனுஷ், விஜய் சேதுபதி என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து பிரபல நடிகையாக வலம் வந்தவர் ஸ்ருதி ஹாசன். உலகநாயகன் கமல்ஹாசனின் மூத்த மகளான இவர் தமிழ் மட்டுமின்றி ஹிந்தி, தெலுங்கு என பல மொழி படங்களிலும் முன்னணி பிரபலங்களுடன் இணைந்து நடித்துள்ளார்.
ஸ்ருதி அசாம் மாநிலம் கவுகாத்தியைச் சேர்ந்த சாந்தனு ஹசாரிகா என்பவரை காதலித்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் அவ்வப்போது தனது காதலருடன் நெருங்கி இருக்கும் புகைப்படங்களை வெளியிடுவார். மேலும் அடிக்கடி அவர் இன்ஸ்டாகிராமில் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளிப்பார்.
அவ்வாறு அண்மையில் அவரிடம் ரசிகர் ஒருவர், உடம்பில் எந்தெந்த பாகங்களில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்தீர்கள்’ என கேட்டுள்ளார். அதற்கு ஸ்ருதி, இது உங்களுக்கு தேவை இல்லாத ஒன்று என கோபமாக பதிலளித்து பின் மூக்கில் மட்டும் என கூறியுள்ளார் அந்த பதிவு வைரலாகி வருகிறது.