#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
43 வருஷங்களுக்கு பிறகு நடிகை சுஹாசினி செய்த செயல், ஆச்சரியத்தில் மூழ்கிய கணவர்.!
தமிழ் சினிமாவில் 80களில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை சுஹாசினி. இவர் என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு, பாலைவனச்சோலை, சிந்து பைரவி என்ற படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே பெரும் பிரபலமடைந்தார்.
இதனை தொடர்ந்து அவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய பல மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.இவர் 1988-ல் இயக்குநர் மணிரத்தினத்தை திருமணம் செய்து கொண்டார்.
நடிகை சுஹாசினி ஒரு பரத நாட்டிய கலைஞர் ஆவார்.இவர் தன்னுடைய 13 ம் வயதில் முதன் முதலில் அரங்கேற்றம் செய்தார்.பின்னர் நடிகையாகி சினிமாவில் நடிக்க தொடங்கிவிட்டார்.
இந்நிலையில்சென்னையில் பிரபலமான சரசால்யா நடனப்பள்ளியின் 70ம் ஆண்டு வைரவிழா நிகழ்ச்சியில் 43 வருடங்கள் கழித்து சுஹாசினி மீண்டும் மேடையில் பரத நாட்டியம் ஆடியுள்ளார். இதனை அவரின் கணவர் மணிரத்னம், மற்றும் மற்ற நடன கலைஞர்கள் ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்துள்ளனர்.
மேலும் சுஹாசினிக்கு அவருடன் பயின்ற சண்முக சுந்தரம் என்பவர் நடனப்பயிற்சி கொடுத்துள்ளார். மேலும் அவருக்கு முதன்முதலிக்குள் நடனம் ஆடும்போது மேக்கப் போட்ட சேதுமாதவன் என்பவரே தற்போதும் மேக்கப் போட்டுள்ளார்.