#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
இந்த நடிகையிடம் என் காதலை தெரிவித்திருந்தால் உயிரோடு இருந்திருப்பார்" மனம் திறந்த சுந்தர் சி...!
மணிவண்ணனிடம் உதவி இயக்குனராக இருந்தவர் சுந்தர். சி. 1995ம் ஆண்டு அருண் விஜய் நடித்த "முறை மாப்பிள்ளை" படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். தொடர்ந்து முறைமாமன், உள்ளத்தை அள்ளித்தா, மேட்டுக்குடி, உன்னைத்தேடி, சுயம்வரம் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.
மேலும் சுந்தர். சி நடிகராக 2006ம் ஆண்டு "தலைநகரம்" படத்தில் அறிமுகமானார். தொடர்ந்து வீரப்பு, சண்டை, ஆயுதம் செய்வோம், தீ, குரு சிஷ்யன், அரண்மனை உள்ளிட்ட படங்களில் நடிகராகவும் களமிறங்கி பிரபலமடைந்துள்ளார்.
சமீபத்தில் ஒரு பேட்டியில், "குஷ்பூ என்னிடம் சௌந்தர்யாவை வைத்து படம் எடுக்க கூடாது என்று கூறியிருந்தார். அது ஏன், குஷ்பூ என் வாழ்வில் வராமல் இருந்திருந்தால் நான் சௌந்தர்யாவை திருமணம் செய்திருப்பேன் என்று குஷ்பூவிடம் கூறியிருந்தேன்.
இப்போதும் கூட நான் குஷ்பூவிடம் கூறுவதுண்டு. நான் சௌந்தர்யாவிடம் ப்ரோபோஸ் செய்திருந்தால் அவர் இன்று உயிரோடு கூட இருந்திருக்கலாம். அவரது அண்ணனும் ஒரு அருமையான நபர். சாவிலும் கூட இருவரும் இணை பிரியவில்லை. சௌந்தர்யா ரொம்ப சிம்பிளான மனிதர்" என்று சுந்தர். சி கூறியுள்ளார்.