மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
படப்பிடிப்பில் பதற்றம்.! சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை "வாடா" என்று அழைத்த அறிமுக நடிகை.!
பிரபல நடிகரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் வெளிவரும் அனைத்து படமுமே மிகப் பெரிய அளவில் ஹிட் கொடுத்துள்ளது. ஆரம்பக் காலத்தில் சின்ன சின்ன கதாப்பாத்திரத்தில் நடித்து ரசிகர்களைத் தன் வசப்படுத்திக் கொண்டவர் ரஜினிகாந்த். திரையுலகில் முன்னாள் நடிகரான எம்.ஜி.ஆர், சிவாஜிக்கு பிறகு சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இயக்குனர் பாலச்சந்தருக்கு ரஜினியை மக்களிடையே பிரபலப்படுத்தியதில் முக்கிய பங்கு உண்டு.
கமல் நடிக்கும் படங்களில் ரஜினி நண்பன் கதாபாத்திரமாகவே அதிகம் நடித்து வந்துள்ளார். இதன் மூலம் பைரவி திரைப்படம் ரஜினிக்கு ஒரு பெரிய திருப்புமுனையாக அமைந்துள்ளது. இந்த படத்தில் தான் இவர் முதன் முதலில் ஹீரோவாக மக்களுக்கு அறிமுகமானார். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் அனைத்துமே சூப்பர் ஹிட் கொடுத்து, நல்ல வசூலையும் பெற்றதால் சூப்பர் ஸ்டாராக மாறினார்.
ரஜினியை வைத்து படம் எடுத்தால் அது ஹிட்டு தான் என்பதால், திரையுலகில் தயாரிப்பாளர்களுக்கிடையே போட்டியும் நிலவியது. தமிழ் சினிமாவில் அன்று முதல் இன்று வரை சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக நம்பர் ஒன் இடத்தை தக்க வைத்துக் கொள்கிறார். இவரிடத்தை இன்னமும் எந்த நடிகராலும் பிடிக்க முடியவில்லை.
ரஜினியை விட தளபதி விஜய் சம்பளத்தில் வேண்டுமானால் முன்னணியில் இருக்கலாம. ஆனால் இவரது நடிப்பு, இவர் படங்களில் உள்ள எதிர்பார்ப்பு, மற்றும் வரவேற்பு போன்றவற்றை வேறு எந்த நடிகராலும் கொடுக்க முடியாது. தற்போது வெளிவந்த ஜெய்லர் படத்தில் கூட இந்த வயதிலும் நடிப்பில் சக்க போடு போட்டு இருக்கிறார். தற்போது வேட்டையன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் இவர், இந்த படம் முடிந்தவுடன் அடுத்த காம்போவாக லோகேஷ் கனகராஜன் இயக்கத்தில் அடுத்து நடிக்க இருப்பதாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில், ரஜினியுடன் தர்மத்தின் தலைவன் படத்தில் முதன் முதலில் குஷ்பூ சில காட்சிகளில் நடித்துள்ளார். மும்பையிலிருந்து தமிழ் சினிமாவிற்கு நடிக்க வந்துள்ள குஷ்புவிற்கு அப்போது தமிழ் தெரியாது. ஹிந்தியும் ஆங்கிலமும் மட்டுமே தெரியும். சிலர் தமிழ் சொல்லித் தருகிறேன் என்று சொல்லி, குட்மார்னிங்க்கு தமிழில் 'வாடா' என்று சொல்லிவிட்டனர்.
அடுத்தநாள் படப்பிடிப்பு இடத்திற்கு சென்றதும் ரஜினியை பார்த்து 'வாடா' என்று குஷ்பு சொல்லி இருக்கிறார். அப்போது படப்பிடிப்பில் இருந்தவர்கள் ஷாக் ஆகிவிட்டனர். உடனே பிரபு குஷ்புவிடம் சென்று ரஜினி சாரை ஏன் இப்படி சொன்னாய்? என்று கேட்டபின் குஷ்பூவுக்கு புரிந்தது. ஆனால் ரஜினி இதைக் கேட்டு சிரித்துக்கொண்டே போய்ட்டாராம். பிறகு தமிழ் வார்த்தைகளை கொஞ்சம் கொஞ்சமாக பிரபுதான் குஷ்புவிற்கு சொல்லிக் கொடுத்திருக்கிறார். இதற்குப் பிறகுதான் ரஜினியுடன் குஷ்பூ நடித்து வெளிவந்த படங்கள் மன்னன், பாண்டியன், அண்ணாமலை என்பது குறிப்பிடத்தக்கது.