மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மும்பையில் குடியேறிய சூர்யா.? அவரே கொடுத்த விளக்கம்.!
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் சூர்யா. இவரையும் நடிப்பில் கடைசியாக வெளியான எதற்கும் துணிந்தவன் திரைப்படம் சரியாக போகவில்லை. இந்த நிலையில் தற்போது இவர் சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவார் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்தப் படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்கிறார்.
இதனைத் தொடர்ந்து நடிகர் சூர்யா சுதா கொங்கரா இயக்கத்திலும், வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் என்ற திரைப்படத்திலும் நடிக்க உள்ளார்.
இந்த நிலையில் சமீபத்தில் நடிகர் சூர்யா தனது குடும்பத்துடன் மும்பையில் குடியேறியதாக தகவல்கள் வெளியாகியது. மேலும் இது குறித்து பல்வேறு விமர்சனங்களும் அவர் மீது வைக்கப்பட்டது.
இந்த நிலையில் இது குறித்து நடிகர் சூர்யா விளக்கம் 'அளித்துள்ளார். அதில், என்னுடைய குழந்தைகள் இருவரும் மும்பையில் படிக்கிறார்கள். அதற்காகத்தான் அடிக்கடி மும்பை சென்று வருகிறேன். மற்றபடி நான் மும்பையில் எல்லாம் குடியேறவில்லை' என விளக்கம் அளித்துள்ளார்