மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கங்குவா படத்தின் முக்கிய அப்டேட் கொடுத்த சூர்யா.. வைரல் புகைப்படம்!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா. இவர் தற்போது இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். என்ன திரைப்படத்தை இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கியுள்ளார். மேலும் இந்த திரைப்படத்தை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்க, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.
Delighted to begin our Post-Production journey offering world class technology and facilities with the most expected #Kanguva 🦅 from @Suriya_offl sir 🔥#AadnahArtsStudios @thedeol @DishPatani @directorsiva @ThisIsDSP @GnanavelrajaKe @UV_Creations @KvnProductions @PenMovies… pic.twitter.com/aHhb0Ey5x9
— Studio Green (@StudioGreen2) February 21, 2024
இந்தத் திரைப்படம் மிகப்பெரிய பொருட்செலவில் மிக பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது. இந்தியா முழுவதும் சுமார் 10 மொழிகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடித்துள்ளார்.
இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. அதன்படி வரும் கோடை விடுமுறையில் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் கங்குவா படத்தின் டப்பிங் பணிகளை நடிகர் சூர்யா தொடங்கியுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. மேலும், இது குறித்த புகைப்படங்களையும் படக்குழு வெளியிட்டுள்ளது.