திருமணம் முடிந்த 2 ஆண்டுகளில் உயிரை மாய்த்த சீரியல் நடிகை; சோகத்தில் ரசிகர்கள்.!
#அன்புள்ளசூர்யா: சூர்யாவிற்கு ஆதரவாக களத்தில் குதித்து திடீரென ட்ரெண்டாக்கிய ரசிகர்கள்!
நடிகர் சூர்யாவிற்கு ஆதரவாக அவரது ரசிகர்கள் #அன்புள்ளசூர்யா என்ற ஹாஸ் டாக்கினை திடீரென ட்விட்டரில் ட்ரெண்ட் ஆக்கியுள்ளனர்.
நடிகர் சூர்யாவின் மனைவியும் நடிகையுமான ஜோதிகா சமீபத்தில் கோவில்களை பற்றி பேசியது சர்ச்சையாக்கப்பட்டது. ஜோதிகா இந்து கோவில்களை பற்றி அவதூறாக பேசிவிட்டார் என பலர் அவருக்கு எதிராக குரல் எழுப்ப துவங்கினர்.
இது ஒருபுறம் இருக்க தற்போது சூர்யாவின் தயாரிப்பில் பார்த்திபன், ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள பொன்மகள் வந்தால் திரைப்படத்தினை ஆன்லைனில் வெளியிடப்போவதாக அறிவித்தனர். இதனால் திரையரங்க உரிமையாளர்கள் சூர்யாவிற்கு எதிராக போர் கொடி தூக்கியுள்ளனர்.
சூர்யாவின் தயாரிப்பில் மற்றும் அவரது நடிப்பில் வெளியாகும் படங்களை திரையரங்குகளில் ஒளிபரப்ப போவதில்லை எனவும் தெரிவித்துள்ளனர். இதனால் அவரது நடிப்பில் வெளியாக தயாராக இருக்கும் சூரரை போற்று படத்திற்கும் பிரச்னை ஏற்பட்டுள்ளது.
சூர்யாவின் இந்த இக்கட்டான சூழ்நிலையில் தற்போது அவரது ரசிகர்கள் ட்விட்டர் வாயிலாக ஆதரவு தெரிவித்து வருகின்றனர். சினிமாவையும் தாண்டி நிஜ வாழ்க்கையில் பல்வேறு நல்ல விஷயங்களை செய்து வரும் சூர்யாவிற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக அவரது ரசிகர்கள் #அன்புள்ளசூர்யா என்ற ஹாஸ் டாக்கினை ட்விட்டரில் ட்ரெண்ட் ஆக்கியுள்ளனர்.