மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கங்குவா படத்தின் முக்கிய அப்டேட் கொடுத்த சூர்யா.. உற்சாகத்தில் ரசிகர்கள்.!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா தற்போதைய இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா என்ற வரலாற்று பின்னணியில் உருவாகும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடைய உள்ள நிலையில், அடுத்த ஆண்டு கோடையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், இந்த திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்க, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.
இந்த நிலையில் கங்குவா புதிய அப்டேட் ஒன்றை நடிகர் சூர்யா தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், "கங்குவா படத்தில் தன் காட்சிகளை நிறைவு செய்துள்ளேன். கங்குவா பட இயக்குனர் சிறுத்தை சிவாவுக்கு நன்றி!. இந்த திரைப்படத்தை திரையில் காண காத்திருக்கிறேன்" என தெரிவித்துள்ளார்.