மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பொது கழிவறையில் ஆடை மாற்றி நடித்த பிரபல நடிகை; இயக்குநர் பாராட்டு.!
சத்ரு படத்தின் பாடல் காட்சிக்காக பொது கழிவறையில் ஆடை மாற்றி நடித்த நடிகை சிருஷ்டி டாங்கேவுக்கு இப்படத்தின் இயக்குனர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
நவீன் நஞ்சுண்டான் இயக்கத்தில் பரியேறும் பெருமாள் பட புகழ் கதிர் நடிக்கும் படம் சத்துரு இப்படத்தை ரகுகுமார், ராஜரத்தினம், ஸ்ரீதரன் ஆகியோர் சேர்ந்து தயாரித்துள்ளனர். இப்படத்தின் ஹீரோயினியாக பிரபல நடிகை சிருஷ்டி டாங்கே நடித்துள்ளார். இப்படம் கிரைம், திரில்லர் படமாக உருவாகியுள்ளது.
இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடந்தது. அதில் பேசிய இயக்குனர் கூறுகையில், ‘இப்படத்தில் கதிர் போலீசாக நடித்துள்ளார். இப்படம் சஸ்பென்ஸ் திரில்லர் படம்.
படம் ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை விறுவிறுப்பாகச் செல்லும். சிருஷ்டி டாங்கே ஷூட்டிங்கின் போது அளித்த ஒத்துழைப்பை மறக்கமுடியாது. பாடல் காட்சிக்காக நாயகி 20 காஸ்ட்யூம் மாத்தவேண்டியிருந்தது. புதுச்சேரி கடற்கரை பப்ளிக் டாய்லெட்டில் காஸ்ட்யூம் மாற்றி, நடித்தார்.’ என அவரை பாராட்டினார்.