மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"யாரும் நம்பாதீங்க., நான் உயிரோட தான் இருக்கன்" - ஊடக செய்திகளுக்கு மறுப்பு தெரிவித்து வீடியோ வெளியிட்ட பிரபல நடிகர்..!!
தமிழ் திரையுலகில் கிழக்கே போகும் ரயில் திரைப்படத்தின் மூலமாக 70s, 80s-களில் அறிமுகமாகி முன்னணி நாயகனாக வளம் வந்தவர் சுதாகர். இவர் இனிக்கும் இளமை, மாந்தோப்பு கிளியே, பொண்ணு ஊருக்கு புதுசு, நிறம் மாறாத பூக்கள் உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.
மேலும் இவர் நடிப்பில் வெளியான கோவில் மணியோசை கேட்டதாரோ, மாஞ்சோலை கிளிதானே உட்பட பல பாடல்கள் இன்றுவரை ரசிகர்களின் நினைவில் நீங்காமல் இருக்கிறது. இந்த நிலையில் சுதாகர் உடல்நிலை குறித்து தெலுங்கு ஊடகங்களில் செய்திகள் பரவிவந்தன.
నా పై రూమర్స్ నమ్మకండి.. నేను ఎలా ఉన్నానో చూడండి#comedian sudhakar#Tollywood@CinemaPosts pic.twitter.com/M7BVUVnVp9
— CINEMA POSTS (@CinemaPosts) May 25, 2023
அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ள அவர், "எனது உடல்நிலை குறித்த தவறான தகவல்களை யாரும் நம்ப வேண்டாம். நான் நல்லபடியாக இருக்கிறேன். உயிருடன் இருக்கிறேன். நல்ல நிலையில் இருக்கிறேன். கவலைப்பட வேண்டாம் என பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.