மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
செம ரொமான்டிக்காக, கோவாவின் நடுக்கடலில் தனது காதலை சொன்ன பிரபல இளம்நடிகர்! வைரலாகும் கியூட் புகைப்படம்!
தெலுங்கு சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களுள் ஒருவர் நிகில் சித்தார்த் துணை இயக்குனராக தனது சினிமா வாழ்க்கையை தொடங்கிய நிகில் சித்தார்த், அதனை தொடர்ந்து சில படங்களில் கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். பின்னர் நல்ல கதைகளை கொண்ட தெலுங்கு படங்களை மட்டும் தேர்வு செய்து நடித்த அவர் தற்போது டோலிவுட்டில் பிரபலமான நடிகராக மாறி விட்டார்.
இவர் சினிமாவிற்குள் நுழைந்த குறுகிய காலத்திலேயே ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ளார். 2014 ஆம் ஆண்டு இவர் நடிப்பில் வெளிவந்த கார்த்திகேயா படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து அவர் தற்போது கார்த்திகேயா 2 படத்தின் வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
நிகில் சித்தார்த் மருத்துவதுறையில் பணி புரிந்துவந்த பல்லவி ஷர்மா என்பவரை காதலித்து வந்தார். இந்நிலையில் அவர் பல்லவி ஷர்மாவை கோவாவில் நடுக்கடலிற்கு அழைத்துச்சென்று தனது காதலை அழகாக கூறியுள்ளார். அதற்கு பல்லவி வர்மாவும் சம்மதம் தெரிவித்துள்ள நிலையில் என் வாழ்க்கையின் அடுத்த சாதனை என கூறி அவர் லவ் ப்ரபோஸ் செய்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதனை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.