பிக்பாஸ் வீட்டிற்குள் என்ட்ரியான கணவர்.! முதல் நாளே நடிகை சுஜா வருணி போட்ட பதிவு.!
தல அஜித் பட பாடல்களை ஒளிபரப்ப தடை; உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் தல அஜித். இவருக்கென ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். விஸ்வாசம் படத்தின் வெற்றியை அடுத்து தற்போது நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்துவருகிறார் அஜித். இந்நிலையில் அவர் நடித்த சில படங்களின் பாடல்களை எலக்ட்ரானிக் மீடியாக்களில் ஒளிபரப்ப நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
தல அஜித் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றிப்படங்களாக அமைந்த வாலி, சிட்டிசன், வில்லன் உள்ளிட்ட 17 படங்களின் பாடல்களை எலக்ட்ரானிக் மீடியாக்களில் ஒளிபரப்ப தடை விதிக்க வேண்டும் என்பது தொடர்பாக பே - ஷோர் ரெக்கார்ட்ஸ் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தது.
அந்த மனுவில், அஜித்தின் 17 படங்களின் பாடல்களின் உரிமையை நாங்கள் வாங்கி வைத்துள்ளோம். ஆனால் அந்த படங்களின் பாடல்களை சோனி மியூசிக் நிறுவனம் தனது யூ-டியூப், திங் மியூசிங் போன்றவற்றில் பதிவிட்டுள்ளது. இது பதிப்புரிமை சட்டத்திற்கு எதிரானதாகும். எனவே குறிப்பிட்ட அந்த சில படங்களின் பாடல்களை ஒளிபரப்ப சோனி மியூசிக் நிறுவனத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தது.
மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், சோனி மியூசிக் பதிவேற்றியுள்ள அஜித்தின் 17 படங்களின் பாடல்களை எலக்ட்ரானிக்ஸ் மீடியாக்களில் ஒளிபரப்ப தடை விதித்துள்ளது.