மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இளையதளபதி விஜய்க்கு வில்லனாக போகும் மைக் மோகன்.. எந்த படத்தில் தெரியுமா.?
தமிழ் சினிமாவில் சினிமாவில் 80களின் ஆரம்ப காலகட்டத்தில் கதாநாயகராக கலக்கி வந்தவர் மைக் மோகன். இவரது திரைப்படங்கள் ரசிகர்களை விட ரசிகைகளையே அதிகம் கவர்ந்தது. இவரது நடிப்பிற்கும், நடனத்திற்கும் தனி ரசிகை கூட்டம் இருந்து வந்தது.
இவரது நடிப்பில் வெளியான திரைப்படங்கள் தொடர் வெற்றியடைந்தாலும் காலப்போக்கில் ஒரு சில தனிப்பட்ட காரணத்தினால் மைக் மோகனின்மார்க்கெட் சரிந்தது. இதனால் திரைப்படங்களில் நடிக்காமல் இருந்தார் மைக் மோகன்.
தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் 'தளபதி 68' திரைப்படத்தில் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் மைக் மோகன். இதற்கு முன்னதாக ஒரு பேட்டியில் வில்லன் கதாபாத்திரத்தில் மட்டும் நடிக்க மாட்டேன் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இயக்குனர் விஜய் ஸ்ரீஜியின் இயக்கத்தில் 'ஹரா' எனும் திரைப்படத்தில் கதாநாயகராகவும் நடித்துள்ளார். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.