தமிழகத்தில் திரையரங்குகள் திறக்கப்படுகிறது.! விதிக்கப்பட்ட புதிய கட்டுப்பாடுகள்.!



theatre open wil tamilnadu


கொரோனா பரவல் மற்றும் ஊரடங்கு காரணமாக நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள், திரையரங்குகள் போன்றவை கடந்த பல மாதங்களாக மூடப்பட்டுள்ளது. திரையரங்குகள் கடந்த மார்ச் மாதம் 17-ந் தேதி முதல் மூடப்பட்டுள்ளதால் தயாரிப்பாளர்கள், திரையரங்க உரிமையாளர்கள், திரைத்துறையை சார்ந்த பலரும் பெரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்துவருகின்றனர்.

இந்தநிலையில் சமீபத்தில் அரசு தளர்வுகளை அறிவித்து திரையரங்குகளை திறக்க அனுமதி அளித்தது. இந்தநிலையில் 7 மாதங்களுக்கு பிறகு பெரிய எதிர்பார்ப்போடு தமிழ்நாடு முழுவதும் இன்று 10.11.2020 செவ்வாய் கிழமை திரையரங்குகள் திறக்கப்படுகின்றன. 50 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் இயங்க வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளதால் இரண்டு இருக்கைகளுக்கு நடுவில் உள்ள இருக்கையில் ரிப்பன் கட்டி தடுத்து வைத்துள்ளனர்.

theatre

திரையரங்கு வளாகத்தில் நுழையும் முன் அனைவருக்கும் உடல் வெப்ப பரிசோதனை செய்த பிறகே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள். டிக்கெட் கவுண்டர்களில் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தி டிக்கெட்டுகளை பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், திரையரங்கு ஊழியர்கள் அனைவரும் முகக்கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.