தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
மும்பை, சென்னை இரண்டு அணிகளுக்குமே இன்று ஆப்பா.? பிளே ஆப் விதியை மாற்றும் இன்றைய போட்டி.!
2021 ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. டெல்லி, சென்னை, பெங்களூரு ஆகிய 3 அணிகள் பிளே-ஆப் சுற்றுக்குள் அதிகாரப்பூர்வமாக நுழைந்துள்ளன. ஆனால், 4-வது இடத்தை கைப்பற்றுவது கொல்கத்தா என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ள நிலையில் இன்று நடைபெற உள்ள கடைசி லீக் ஆட்டம் அதை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யும்.
ஐபிஎல் தொடரின் இன்று முக்கியமான இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளது. இதில் மும்பை மற்றும் ஹைதராபாத் அணியும், பெங்களூரு மற்றும் டெல்லி அணிகள் மோதவுள்ளன. இப்போட்டியில் மும்பை அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற வேண்டும் என்றால் ஹைதராபாத் அணியை 177 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஜெயிக்க வேண்டும், அதே சமயம் ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்து 20 ரன்கள் எடுத்தால் 8.4 ஓவர்களில் சேஸ் செய்ய வேண்டும்.
இது நடந்தால் மட்டுமே மும்பை அணியால் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியும். மும்பைக்கு மட்டுமின்றி, இன்று சென்னை அணியும், பெங்களூரு அணியின் ஆட்டத்தை கூர்ந்து கவனிக்கும். பெங்களூரு அணி, டெல்லியை 163 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால், பெங்களூரு அணி இரண்டாவது இடத்திற்கு சென்றுவிடும், சென்னை அணி மூன்றாவது இடத்திற்கு தள்ளப்படும்.
ஐபிஎல் தொடரில், முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு பிளே ஆப் சுற்றில் ஒரு முறை தோற்றால் கூட, அடுத்த முறை வாய்ப்பு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே சென்னை அணியும் இன்றைய ஆட்டத்தை கூர்ந்து கவனிக்கும் சூழ்நிலை உருவாகி உள்ளது.