#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
"வாடா என் மச்சி., வாழக்கா பஜ்ஜி" அடுக்குமொழியில் அசரவைக்கும் டி.ராஜேந்திரனுக்கு இன்று பிறந்தநாள்..! குவியும் வாழ்த்துகள்..!!
மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள இளையானூரில் பிறந்த தமிழ் திரைப்பட நடிகர், இயக்குனர், பாடகர், இசைகவிஞர், தமிழக அரசியல்வாதி என பன்முகத் தோற்றத்தை கொண்டவர் டி.ராஜேந்தர். இவர் வீராசாமி உட்பட பல படங்களில் நடித்துள்ளார். இவரின் மகன் சிலம்பரசனும் பிரபலமான நடிகராவார். 1980களில் டி.ராஜேந்தர் என்ற அறியப்பட்ட இவர், பின் விஜய் டி.ராஜேந்திரன் என தனது பெயரை மாற்றிக்கொண்டார்.
அடுக்குமொழி பேசுவதில் இவருக்கு இணை யாருமில்லை என்று கூறலாம். சினிமா வாழ்க்கைக்கு பின்னர் திமுகவில் இணைந்து அரசியல் பயணத்தை தொடங்கிய ராஜேந்தர், 1996-ல் சென்னை பூங்கா நகர் தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்வு செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து இவர் திமுகவிலிருந்து விலகி தாயக மறுமலர்ச்சி கழகத்தையும் தொடங்கி இருக்கிறார்.
கடந்த 1980-ல் ஒரு தலை ராகம் திரைப்படம் மூலமாக இயக்குனர் மற்றும் நடிகராக அறிமுகமான ராஜேந்தர், ரயில் பயணங்களில் நெஞ்சில் ஒரு ராகம், உறவை காத்த கிளி, மைதிலி என்னை காதலி, ஒரு தாயின் சபதம், பண்ணாரி அம்மன், வல்லவன், வீராசாமி, கவண், இது நம்ம ஆளு உட்பட பல படங்களை எழுதி இயக்கியுள்ளார். இதில் பல படங்களுக்கு நடிப்பும், தயாரிப்பும் என பல பணிகளை ஆற்றியுள்ளார். இன்று அவருக்கு பிறந்தநாள் அவரது பிறந்தநாளுக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.